சரத்குமார், ராதிகா, தேவயானி, ஆனந்த் ராஜ் என பலர் நடித்து தமிழ் சினிமாவையே கலக்கிய படம் தான் சூர்யவம்சம். இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேல் ஆகிறது.ஆனால் இப்போதும் இந்த படத்தை டிவியில் போட்டால் இந்த படத்தை பார்க்கவே ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. ஒரே பாட்டில் முன்னேறும் இந்த கதையின் பாசிட்டிவான கதைக்களம் தான் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். இன்றளவும் அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் சிறுவன் என்றே பலரும் நினைப்பதுண்டு. ஆனால் அது சிறுவன் இல்லை சிறுமி.
இவர் பெயர் ஹேமலதா. இப்படத்தை தாண்டி உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பூமகள் ஊர்வலம், சேது, காதல் கொண்டேன் உள்ளிட்ட பல படங்களில் ஹேமலதா நடித்திருக்கிறார்.
மேலும் இவர் சித்தி, கனா காணும் காலங்கள், தென்றல் போன்ற பல தொடர்களில் ஹேமலதா நடித்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து ஒரு மகளும் இருக்கிறார். இவர் சோசியல் மீடியாவில் வெகு பிரபலம். இவரது இன்ஸ்டா ரீல்கள் வைரலாவதும் சகஜம். அந்த வகையில் இப்போது இவரது சூரியவம்சம் கதாபாத்திரம் வைரலாகி வருகிறது.