வவுனியா பல்கலைக்கழக மாணவர்களிடம் கைவரிசை காட்டிய மன்னாரைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(05.03.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மன்னாரைச் சேர்ந்த 44 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் சூட்டுசுமான முறையில் அனுராதபுரத்திற்கு வரவழைத்து கைது செய்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 3ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் காலியில் இருந்து வவுனியா பல்கலைக்கழகத்திற்கு வந்த இரு மாணவர்கள் அதிகாலை வேளை புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த போது பயணிகள் இருக்கையில் அமர்ந்த நிலையில் உறங்கியுள்ளனர்.
உறக்கம் களைந்து எழுந்து பார்த்த போது, அவர்களில் ஒருவர் அணிந்திருந்த பையினை காணவில்லை. அதில் இருந்த இரு கைத்தொலைபேசி மற்றும் சங்கிலி என்பன காணாமல் போயுள்ளன.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா தலைமைப் பொலிஸாரினால் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபரிடமிருந்து கெக்கிராவ, புத்தளம் ஆகிய இடங்களில் இருந்து திருடப்பட்ட கைத்தொலைபேசி மற்றும் சங்கிலி என்பன மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் மேலதிக விசாரணையின் பின் சந்தேக நபரையும் சான்றுப் பொருட்களையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Font size:
Print
Related Posts