தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடி என்றால் முதலில் நினைவுக்கு வருவது சூர்யா - ஜோதிகா தான். இப்போது குழந்தைகள் படிப்பிற்காக சூர்யா தனது குடும்பத்தோடு மும்பையில் குடியேறியுள்ளார். அங்கு பல கோடி செலவில் வீடு கட்டி வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு தியா எனும் ஒரு மகளும், தேவ் எனும் ஒரு மகனும் உள்ளார்கள். இவர்கள் இருவரும் தற்போது பள்ளியில் படித்து வருகிறார்கள். அவ்வப்போது அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து வைரலாகும். அந்த வகையில் அவர்களுடைய லேட்டஸ்ட் புகைப்படம் வெளிவந்து அனைவரையும் ஆச்சிரியப்பட வைத்துள்ளது.
சமீபத்தில் ISPL T10 எனும் கிரிக்கெட் தொடர் துவங்கியது. இதில் தனது மகள் மற்றும் மகனுடன் பங்கேற்றார் சூர்யா.அப்போது இந்திய கிரிக்கெட் வீரரான ரய்னாவுடன் சூர்யாவின் மகள், மகன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் தியாவை பார்த்து, அச்சு அசல் அப்படியே குட்டி ஜோதிகாவை பார்ப்பது போலவே இருக்கிறது என கூறி வருகிறார்கள். பெரும்பாலும் சூர்யா மீடியா, தன்னுடைய குழந்தைகளை போட்டோ எடுக்காதவாறு பார்த்துக்கொள்வார். இருப்பினும் இப்போது தியாவின் புகைப்படம் வைரலாகி வருகிறது.