ஆறு வருடங்களாக நயன் மற்றும் விக்னேஷ் காதலித்து கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இந்திய சினிமாவே வியக்கும் வண்ணம் இவர்களது திருமணம் நடைபெற்றது.
பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாய் ஆனார் நயன்தாரா. கணவர், பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக நயன்தாரா வாழ்ந்து வருகிறார். திடீரென இன்ஸ்டா பக்கத்தில் கணக்கு ஓபன் செய்த நயன்தாரா, அவ்வப்போது தன்னுடைய மகன்களின் புகைப்படத்தை வெளியிடுவார். ஆனால் பெரும்பாலும் தொழில் நோக்கத்திற்காகவே இன்ஸ்டா பக்கத்தை தொடங்கினார் நயன்தாரா. இப்படி இருக்க
சில மாதங்களுக்கு முன்னர் நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விவாகரத்து பெற போவதாக சர்ச்சை ஒன்று வைரலானது. ஆனால் அது குறித்து இருவரும் மவுனம் சாதித்து வந்தார்கள்.
பின்னர் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா இருக்கும் வீடியோ ஒன்று வைரலானது. இதன்மூலம் விக்னேஷ் சிவன் - நயன்தாரா விவாகரத்து சர்ச்சை முடிவுக்கு வந்தது.
மீண்டும் மீண்டுமா
இந்த நிலையில், நடிகை நயன்தாரா ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் umm.. Im lost என பதிவு செய்துள்ளார். இதன்மூலம் மீண்டும் இந்த விவாகரத்து சர்ச்சை பரவு துவங்கிவிட்டது.விவாகரத்து சர்ச்சை குறித்த பதிவா இது, அல்லது ஏதேனும் படம் அல்லது விளம்பர படம் குறித்து பதிவா இது என்றும் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
Font size:
Print
Related Posts