புதுச்சேரி சிறுமிக்கு நேற்று முன்தினம் அஞ்சலி செலுத்த சென்ற புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆளுநரே வெளியேறு என்று மக்கள் முழக்கமிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன்,
பெண்களுக்கு உணர்வு என்ன இருக்கோ, அதே உணர்வு தான் எனக்கும் இருக்கு. அந்த குடும்பத்தோடு நான் நிற்க வேண்டும் என்பதற்காக நான் இங்கு வந்தேன். இது மக்களோட உணர்வாக தான் நான் பார்க்கிறேன். அதனாலதான் நான் வந்து, அந்த குடும்பத்துடன் நிற்கிறேன். அந்த அம்மா என்னை பார்த்த உடனே நீங்க என் கூட வந்து நிக்கிறீங்கன்னு என்பது எனக்கு மிகப்பெரிய ஆறுதல் என சொன்னாங்க.
நான் இன்னைக்கே அரசாங்கத்திடம் வேகமாக ஸ்பெஷல் கோர்ட் அமைத்து ஒரு வாரத்திற்குள் அந்த குழந்தைக்கு நீதி கிடைப்பதற்கான நேரம் செய்யப் போறேன். நான் போன உடனே அரசாங்கத்திடம் ஸ்பெஷல் கோர்ட் ஃபாஸ்ர் டிராக் கோர்ட் சிறப்பு நீதிமன்றம், விரைவு சிறப்பு நீதிமன்றத்தை உடனே அமைத்து ஒரு வாரத்திற்குள் தீர்ப்பு வரணும். அந்த குற்றவாளிகள் தண்டிக்க படணும் என ஆவேசமானார்.
Font size:
Print
Related Posts