கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக காலமான பிரபல நடிகை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்தி சின்னத்திரை தொடர்களில் நடித்த பிரபல நடிகையான டோலி சோஹி கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். இவருக்கு வயது 48. டோலி சோஹியின் சகோதரியும் நடிகையுமான அமந்தீப் சோஹி மஞ்சள் காமாலை பாதிப்பால் பலியான நிலையில், அடுத்த நாளே டோலி சோஹி மரணம் அடைந்திருப்பது இந்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. டோலி சோஹியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவில், பிரார்த்தனை பல அற்புதங்களை செய்யக்கூடியது. எனவே எனக்காக உங்கள் பிராத்தனை எனக்கு வேண்டும் என பதிவிட்டிருந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக காலமாகியுள்ளார். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து பல மருத்துவர்கள் விழிப்புணர்வு செய்து வருகிறார்கள். அது வரமால் தடுக்க முன்னரே போடப்படும் தடுப்பூசி குறித்து பிரபலங்கள் கூட விழிப்புணர்வு செய்து வருகிறார்கள். இந்தநிலையில் இப்போது டோலி சோஹி காலமாகி உள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts