ஐஸ்கிரீம் விளம்பரத்தில் நடிக்க சமந்தா வாங்கிய சம்பளம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தென்னிந்திய சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருக்கிறார் சமந்தா. சினிமா பின்னணி இல்லாமல் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து சினிமாவில் இன்று முன்னணி ஹீரோயினாக உள்ளார். தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம், பாலிவுட் என இந்திய சினிமாவை கலக்கி வருகிறார். பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தி வரும் தென்னிந்திய நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் ஹாலிவுட்டில் வெளிவந்த சிட்டாடல் எனும் வெப் தொடரில் இந்திய பதிப்பில் நடிக்கிறார்..இந்த வெப் தொடர் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த வெப் தொடரில் நடிப்பதற்காக நடிகை சமந்தா ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கினார் என கூறப்படுகிறது. இந்த நிலையில், படங்களில் நடிக்க ரூ. 7 கோடி, வெப் தொடரில் நடிக்க ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் சமந்தா, விளம்பரங்களில் நடிக்க ரூ. 1.5 கோடி முதல் ரூ. 2 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம். சமீபத்தில் ஐஸ் க்ரீன் விளம்பரத்தில் கூட சமந்தா நடித்துள்ளார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார். இவர் இப்படி என்றால் நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மாம்பழ விளம்பரத்தில் நடிக்க மட்டும் ஐந்து கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். படத்தில் நடிக்க பத்துகோடி வாங்கி வருகிறாராம்.

Related Posts