இரண்டாவதாக திருமணம் செய்யும் நடிகர் சித்தார்த்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஆய்த எழுத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதன்பின்னர் பல படங்களில் நடித்து விட்டார். அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை பேசி இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாவார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சித்தா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் செக்க சிவந்த வானம், ஹே சினாமிகா, காற்று வெளியிடை, சைக்கோ போன்ற படங்கள் மூலம் மக்களிடம் பிரபலமானவர் அதிதி ராவ். 

தற்போது சித்தார்த் மற்றும் அதிதி ராவ் குறித்த ஸ்பெஷல் தகவல் தான் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் கடந்த சில நாட்களாக சித்தார்த் மற்றும் அதிதி ராவ் திருமணம் குறித்து பேச்சுகள் எழுந்த நிலையில் சூப்பர் புகைப்படம் வெளியாகியுள்ளது.அதாவது சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து முடித்துள்ளனர். அதிதி ஸ்பெஷல் போட்டோவுடன் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். இது சித்தார்த்துக்கு இரண்டாம் திருமணம் ஆகும். ஏற்கனவே மேக்னா என்பவரை திருமணம் செய்துபின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts