பிரபல நடிகையை மிரட்டிய ரசிகர்கள்! ஏன்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் வெற்றிநடை போடும் தொடர் என்றால் அது சிறகடிக்க ஆசை சீரியல் தான். இந்த சீரியல் முழுக்க பல டிவிஸ்டுகள். அதனாலே பலருக்கும் பிடித்தமான தொடராக இந்த சீரியல் மாறியுள்ளது. இந்த தொடரில் கடைசியில் என்ன நடக்கப்போகிறது என்பது பற்றிய ஆர்வம் தான் இந்த சீரியலின் TRB உயர முக்கிய காரணம். இந்த சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவாக நடித்து வருபவர் அனிலா. இவர் தனது சினிமா பயணம் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். 

அதில் அவர், நான் 33 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன், ஆனால் எனக்கு இதுவரைக்கும் எந்த கேரக்டரிலும் கிடைக்காத பிரபலம் இந்த சிறகடிக்க ஆசை சீரியல் கொடுத்துள்ளது. பலர் நான் வெளியே போகும்போதெல்லாம் என்னோடு வந்து போட்டோ எடுக்கிறார்கள், ஆனால் இன்ஸ்டாவில் வீடியோ போட்டால் ஒரு சிலர் என்னை திட்டி கமெண்ட் போடுகிறார்கள். சீரியலில் ஏன் மீனாவை எப்போது பாடாய் படுத்துறீங்க என சொல்கின்றனர், ஒரு சிலர் உங்களை நேரில் பார்த்தால் நான் ஆசிட் அடித்துவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள். ஒருபக்கம் சிரிப்பாக இருந்தால் கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது என்று சிரித்தப்படியே கூறியுள்ளார்.

கனடாவில் ராட்சத பாம்பு | வீட்டில் வளர்ப்பு | Thedipaar News

Related Posts