செஃப் தாமுவின் இளம் வயது போட்டோ!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தற்போது முன்னணியில் இருக்கும் பிரபலங்களின் இளம் வயது போட்டோக்களை பார்த்தால், அவரா இது என நிச்சயம் தோன்றும் அந்த அளவுக்கு தான் புகைப்படங்கள் இருக்கும். அப்படித்தான் இப்போதெல்லாம் பிரபலங்கள் சின்ன வயதில் எடுத்த புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகிறது. அப்படி தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் நடுவராக இருந்து வரும் செஃப் தாமுவின் இளம் வயது போட்டோ வைரல் ஆகி வருகிறது. செஃப் தாமு நீண்டகாலமாகவே சின்னத்திரை மற்றும் youtubeல் பிரபலம் தான்.அவர் திருமணத்திற்கு முன் எடுத்த போட்டோ தான் அது. 

தான் இந்த இடத்திற்கு வர எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை நிறைய இடங்களில் பதிவு செய்துள்ளார். இவரது சமையலுக்காக மட்டும் யாரும் இவரை பார்ப்பதில்லை, இவரது கலகலப்பான பேச்சுக்காகவும் தான் இவரை ரசிக்கிறார்கள். முன்னர் இவரது காணொளிகள் அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் சென்றடையவில்லை, ஆனால் குக் வித் கோமாளியில் நடுவராக இறங்கியது முதல் இவரது காணொளிகள் இப்போது மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்க தக்கதாக மாறியுள்ளது. காரணம் இவரது கலகலப்பான பேச்சு.

தான் சமையல் துறையில் ஜாம்பவான் என்ற தலைக்கணம் சிறிதும் இல்லாமல் குக்வித் கோமாளியில் தான் ஒரு நடுவராக இருந்தாலும் கூட காமெடி ஷோவில் எப்படி இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு அழகாக அந்த ஷோவில் பங்கேற்று இருப்பார். இப்போது இணையத்தில் இவருக்கு ரசிகர்கள் ஏராளம் என்றுதான் சொல்லவேண்டும்.

Related Posts