இந்த பெண்ணை நியாபகம் இருக்கா? பிரபலமான நடிகை இப்போது என்ன செய்கிறார்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கோலி சோடா. 4 சிறுவர்கள் 2 சிறுமிகள் இவர்களை சுற்றிய கதையாக வெளியான இப்படத்தில் பசங்க படத்தில் நடித்திருந்த சிறுவர்கள் தான் நடித்திருந்தார்கள். வித்தியாசமான கதைக்களத்தை பார்க்க விரும்புவர்களுக்கு இந்த படம் எப்போதும் சிறந்த பொழுதுபோக்கு தான். சாதாரண மக்களின் வாழ்வில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களும் இந்த படத்தில் ஆழமாக சொல்லப்பட்டிருக்கும். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதிலும் ATM கதாபாத்திரத்திற்கு நல்ல ரீச் இருந்தது. புட்டி கண்ணாடியுடன் ஒல்லியாக அந்த கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார் சீதா என்ற பெண். 

ஹீரோயின் கூட இந்த அளவிற்கு நடிக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். ஹீரோக்களுக்கு இணையாக நடித்து அசத்தியிருப்பார் சீதா. அப்படத்தை தொடர்ந்து விக்ரம், சமந்தா நடித்த 10 என்றதுக்குள்ள மற்றும் பிரபுதேவா நடித்த சார்லின் சாப்ளின் படங்களில் நடித்திருந்தார். தற்போது நடிகை சீதாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வர அதைப்பார்த்த ரசிகர்கள் ATMஆ இது என ஆச்சரியமாக பார்க்கின்றனர். இப்போது சமீப காலமாக பட வாய்ப்பு கிடைக்காமல் உள்ளார். ஆனால் இவரது திறமை அபாரமானது என்பது இவரது படங்களை பார்த்தவர்களுக்கு தெரியும். என்ன செய்வது அழகை பார்த்து வாய்ப்பு கொடுக்கும் மனிதர்கள் மத்தியில் சீதா போன்ற திறமையான பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

Related Posts