நடிகை மீனாவின் பிரம்மாண்ட வீடு! தமிழ்நாட்டில் கேரளத்து இல்லம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகை மீனா 80களில் குழந்தை நட்சத்திரமாகவும் மற்றும் 90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். அவரது கண்ணழகுக்கே எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது 47 வயதாகும் மீனா படங்களில் குணச்சித்திர ரோல்கள் மற்றும் டிவி ரியாலிட்டி ஷோவில் நடுவர், விளம்பரங்கள் என பலவற்றில் நடித்து வருகிறார். வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகளும் இருக்கிறார். 2022ல் மீனாவின் கணவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

கணவர் இறந்த சில காலத்திலே அந்த சோகத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டார். இப்போது பிசியாக சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது இவரது இரண்டாவது திருமணம் பற்றிய செய்திகள் வைரலாகி வரும், ஆனால் இவரோ அந்த செய்திகளை கண்டுகொள்ளாமல் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறார். நடிகை மீனாவுக்கு சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் சொந்தமாக பிரம்மாண்ட வீடு இருக்கிறது. கேரள முறைப்படி அந்த வீட்டை கட்டி இருக்கின்றனர். அந்த வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பார்க்கவே தமிழ்நாட்டில் ஒரு கேரள வீடு என்பது போலத்தான் உள்ளது.

Related Posts