இன்று பூமிக்கு அருகே கடக்கும் விண்கல்: நாசா தீவிர கண்காணிப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

100 அடி விட்டமுடைய விண்கல் ஒன்று பூமிக்கு அருகே இன்று கடக்க இருக்கிறது. எனினும் அதனால் பூமிக்கு ஏதேனும் நாசம் விளைய வாய்ப்புண்டா என நாசா விண்வெளி ஆய்வு மையம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

100 அடி விட்டமுடைய 2024 FL3 என்ற விண்கல் குறித்து, சர்வதேச நாடுகளின் விண்வெளி ஆய்வு மையங்களுடன் இணைந்து, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

பூமியின் அருகே 20,30,000 மைல் தொலைவில் இந்த விண்கல் பூமியைக் கடக்க இருக்கிறது. இவ்வாறு கடக்கும் விண்கல் பூமியில் மோதுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்ற போதும், ஒழுங்கற்ற சுற்று வட்டப்பாதையில் சுழலும் இந்த விண்கற்கள், கணிக்க இயலாத காரணங்களால் விபரீதத்துக்கு வழி செய்யக்கூடும். இதுமட்டுமன்றி 2021 FD1 என்றொரு விண்கல், 5,58,000 மைல்கள் தொலைவில், அடுத்தபடியாக பூமியை கடக்க இருக்கிறது.

Related Posts