பாலா செய்யும் உதவியே அவரது காதலுக்கு பாதகமாகி விட்டதே?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

டிவி பாலா சமீப காலமாக தான் சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் ஏழைகளுக்கு உதவ செலவிட்டு வருகிறார். ஒரு ரூபாய் கூட தனக்கு என்று சேமிக்கும் குணம் இல்லாதவர். ஏழை மக்களுக்காக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, வறுமையில் இருப்பவருக்கு ஆட்டோ வாங்கி கொடுப்பது, பைக் வாங்கி கொடுப்பது என பல விஷயங்கள் செய்து வருகிறார். பாலா ஒரு பெண்ணை காதலித்து வருகிறார் என்றும், அவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்றும் முன்பே தகவல் வெளியானது. ஆரம்பத்தில் பெண் வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருக்கின்றனர், ஆனால் தற்போது தயக்கம் காட்டுகிறார்களாம். 

ஒரு நடிகருக்கு சில காலத்திற்கு தான் வாய்ப்புகள் கிடைக்கும், அப்போதே சேர்த்து வைத்தால் தான் வருங்காலத்தில் குடும்பத்தையும் தன்னையும் காப்பாற்றிக்கொள்ள முடியும். ஆனால் பாலா சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் உதவி செய்கிறேன் என சொல்லி கொடுத்து விடுகிறார். இறுதிக்காலத்தில் எப்படி மனைவி பிள்ளைகளை காப்பாற்றுவார் என பெண் வீட்டார் கேள்வி கேட்கிறார்களாம். பாலாவின் உதவும் குணம் அவரது காதலிற்கே பாதகமாக மாறியுள்ளது. என்ன செய்வாரோ பாலா? கண்டிப்பாக அவர் செய்யும் தானம் தர்மங்கள் அவரை மேலும் உயர்த்தும். கண்டிப்பாக அவர் சினிமாவில் உயர்ந்த இடத்தில் இருக்க போகிறார் என்பதற்கு அவர் செய்யும் உதவிகளே சாட்சி.

கணவனை பிரிந்த துக்கத்தில் ஆன்மீகத்தில் ரஜினி மகள்! | Thedipaar News

Related Posts
©   Thedipaar

விபத்து ; இளைஞன் பலி