Font size:
Print
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ரேணுகா மேனன்.தமிழை தாண்டி மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவருடைய முதல் திரைப்படமே மிகப்பெரிய பிரபலத்தை தந்தது. குடும்ப பாங்கான முகம் என்பதால் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஹீரோயினாக சில காலத்திலே வளர்ந்துவிட்டார்.
அதன்பிறகு பிப்ரவரி 14, கலாபக் காதலன் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இவர் 2006ம் ஆண்டு சுராஜ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.தற்போது திருமணத்திற்கு பிறகு கலிபோர்னியாவில் செட்டில் ஆகிவிட்டார்.தற்போது அவர் தனது குடும்பத்துடன் லேட்டஸ்ட்டாக எடுத்த புகைப்படம் வெளியாக இவருக்கு இவ்வளவு பெரிய மகள்களா என ரசிகர்கள் போட்டோவிற்கு லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
Related Posts