வடிவேலுவை போலவே உள்ள அவரது மகன்! வைரல் புகைப்படம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

வைகை புயல் வடிவேலுவை பற்றி பெரிய அறிமுகம் கொடுக்க தேவையில்லை. தமிழ்நாடே இவரது காமெடிக்கு அடிமை என்று தான் சொல்ல வேண்டும். இவர் இப்போது பெரிதாக நடிக்கவில்லை இருப்பினும் கூட இவரது காமெடிகள் தான் மீம்ஸ் பக்கத்தில் உலாவி கொண்டு இருக்கிறது. சோசியல் மீடியாவில் அவர் இல்லாத டெம்ப்ளட்டே இல்லை. நீண்ட காலமாக சினிமாவில் இருந்து விலகி இருந்த வடிவேலு, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். 

அந்த படம் பெரிதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்படவில்லை, இதனை அடுத்து அவர் நடித்த மாமன்னன் படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது. காமெடி கதாபாத்திரத்தை விடுத்து மிகவும் சீரியசான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வடிவேலுவிற்கு இப்படியும் நடிக்க தெரியுமா? என்றவாறு தான் பார்க்கப்பட்டது. நடிகர் வடிவேலுவுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் நடிகர் வடிவேலு, அவரது மகன் சுப்பிரமணியின் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.பார்க்க இவர் அச்சு அசல் நடிகர் வடிவேலுவை போலவே உள்ளார்.

Related Posts