முரட்டு வில்லனின் இளமை புகைப்படம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் பிரபல நடிகர் ஒருவரின் புகைப்படமும் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் என கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 1990ல் தனது திரை பயணத்தை துவங்கிய இவர் அன்று முதல் இன்று வரை கலக்கிக்கொண்டு இருக்கிறார். அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதையும் தனது வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் கூட திரிஷா பற்றி சர்ச்சைக்கு உண்டான கருத்தை பேசி மாட்டிக்கொண்டார். 

யாரென்று கண்டுபிடித்து விட்டீர்களா? அவர் வேறு யாருமில்லை, முரட்டு வில்லன் நடிகர் மன்சூர் அலி கான் தான். இவர் நடிக்க வேண்டாம் பார்த்தாலே போதும் பயமாக இருக்கும் இவரது தோற்றம். தமிழ் சினிமாவில் டாப் 10 வில்லன்களில் ஒருவராக இருக்கும் மன்சூர் அலிகானின் இளம் வயது புகைப்படம் தான் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாக இவர் வில்லன் கதாபாத்திரங்களை விட நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. காமெடியிலும் இவரை அடித்துக்கொள்ள ஆளில்லை. இப்போதெல்லாம் ஆனந்தராஜ், மன்சூர் அலிகான் போன்ற நடிகர்கள் காமெடியாக சிறப்பாக நடித்து வருகிறார்கள். ஒரு காலத்தில் முரட்டு வில்லனாக நடித்தவர்கள் இப்போது காமெடியனாக நடிப்பதை மக்கள் ரசிக்கவே செய்கிறார்கள்.

Related Posts