விஜய் ஆண்டனி இசை அமைப்பாளராக சினிமாவில் நுழைந்து இப்போது ஹீரோவாக நடித்து வருகிறார். வாழ்க்கையில் இப்போது மிகப்பெரும் சவால்களை சந்தித்து வருகிறார். பெரிய விபத்து ஏற்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தவருக்கு அடுத்த பேரதிர்ச்சி காத்து கொண்டிருந்தது. அது என்னவென்றால் இவரது மகளின் மரணம். இப்போது வரை இவரது மகள் என்ன காரணத்திற்காக தனது உயிரை மாய்த்து கொண்டார் என்பது தெரியவில்லை. அந்த துயரத்திலும் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார் விஜய் ஆண்டனி.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த விஜய் ஆண்டனி, தன்னுடைய ரோமியோ திரைப்படம் குறித்து, திருமணத்திற்கு பின் மனைவி - கணவர் இடையே காதல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து படம் தான் ரோமியோ படம் என திரைப்படம் பற்றி பேசிக்கொண்டிருந்தார். மேலும் அவர் பேசுகையில், அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் கொடுத்தால் தாராளமாக வாங்கி கொள்ளுங்கள். வாக்கு படம் கொடுப்பது தவறாக இருந்தாலும் வறுமை, குடும்ப சூழ்நிலை கருதிபணம் வாங்கி கொள்ளலாம். அது உங்களுடைய பணம் தான். பணம் கொடுத்தால் அந்த கட்சிக்கு தான் வாக்களிப்பேன் என்று இல்லாமல் நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் என்று விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.