தமிழ் சினிமாவில் நடிகர் பட்டியலில் முக்கியமானவர் நடிகர் விஜயகுமார்.கதாநாயகனாக நடிக்க தொடங்கினாலும் அதிகம் குணச்சித்திர வேடங்களிலும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார். விஜயகுமாரை தொடர்ந்து அவரது இரண்டாவது மனைவி மஞ்சுளா, மகன், மகள்கள் அனைவருமே சினிமாவில் நடித்துள்ளனர். விஜயகுமார் முதல் மனைவி முத்துக்கண்ணு என்பவரை திருமணம் செய்த நிலையில், இவரது முதல் மனைவிக்கு ஒரு மகனும் இரு மகள்களும் உள்ளனர். மகன் அருண் விஜய் படத்தில் நடிக்கிறார். மற்ற இரு மகள்களில் ஒருவரான அனிதா மருத்துவராக உள்ளார். இவரது மகள் தியாவின் திருமணம் தான் சமீபத்தில் இணையத்தில் படுவைரலாக நடந்தது. அடுத்த மகள் கவிதா சினிமாவில் சில படத்தில் நடித்துள்ளார்.
விஜயகுமாரின் இரண்டாவது மனைவியான மஞ்சுளாவுக்கு மூன்று மகள்கள் உள்ளனர் அதில் வனிதாவை உங்களுக்கு தெரிந்திருக்கும் அடுத்து ப்ரீத்தா சில படங்களில் நடித்துள்ளார். அடுத்து ஸ்ரீ தேவி பல படங்களில் நடித்துள்ளார். இப்போது விஜய் டிவியில் நடன நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். மறைந்த நடிகை மஞ்சுளாவின் மகள் ஸ்ரீதேவி ஒரு பேட்டியில், அம்மாவின் இறப்பிற்கு பிறகு நாங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டோம். அந்த வேதனையில் இருந்து வெளியே வருவதற்கு என்னுடைய அக்கா தான் உறுதுணையாக இருந்தார்.கல்யாணத்துக்கு பிறகு நான் கர்ப்பமானதும் அந்த நேரத்தில் அம்மாவுடைய நினைவு எனக்கு அதிகமாக வந்தது. ஆனால் அம்மா இல்லாத கஷ்டம் வரக்கூடாது என்பதற்காக என்னை பார்த்துக்கொண்டது அக்கா ப்ரீத்தா தான்.அதுபோல என்னுடைய மகள் எனக்கு எங்க அம்மாவின் மறு உருவமாகத்தான் கிடைத்திருக்கிறார் என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.