பாஜக-வில் இணைந்த பிரபல நடிகை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை ஆர்த்தி இவர் பல படங்களில் நடித்துள்ளார். நடிகை ஆர்த்தி கடந்த 2014 ஆம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்த நிலையில் அவரது மறைவிற்குப் பின் அதிமுகவிலிருந்து விலகி அரசியலில் இருந்தும் விலகி இருந்தார். இந்நிலையில் தற்போது திடீரென அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார். மேலும் அவரது கணவர் கணேஷ் என்பவரும் பாஜகவில் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஆர்த்தி மற்றும் அவரது கணவர் கணேஷ் ஆகிய இருவரும் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடற்படை மீனவர்கள் மீது தாக்குதல் | Thedipaar News

Related Posts