Font size:
Print
இலங்கையில் அமைதி வழியில் நடத்தப்படும் போராட்டங்களை நசுக்குவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
2022 மார்ச் முதல் 2023 ஜூன் வரை இலங்கையில் நடைபெற்ற 30 போராட்டங்களில், போராட்டக்காரர்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் அதிக பலத்தை பிரயோகித்ததாக சர்வதேச மன்னிப்பு சபையின் புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொள்ளத் தவறியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
சட்டவிரோத பலவந்த பிரயோகத்திற்கு காரணமான அதிகாரிகளை நேரடி விசாரணைக்கு உட்படுத்தி சட்டத்தின் முன் நிறுத்தும் வரை இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்பை அவசரமாக மீளாய்வு செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை , சர்வதேச சமூகத்திடமும் கோரிக்கை விடுத்துள்ளது. (P)
Related Posts