வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் உயிரிழப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்கள் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய இஸ்லாமிய குழு மற்றும் ஹனியேவின் குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இறந்த மூன்று மகன்மார்கள் ஹமாஸின் ஆயுதப் பிரிவின் கடமையாற்றியதாக இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்துள்ளது.

இதேவேளை ஹனியாவின் குடும்பத்தாரின் வீடு கடந்த நவம்பரில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அழிக்கப்பட்டது.

இத்தாக்குதலில் ஹனியாவின் பேரன்கள் மூவரும் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஒரு பேரன் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஹனியாவுக்கு 13 மகன்கள் மற்றும் மகள்கள் இருப்பதாக ஹமாஸ் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. (P)

இனியும் கம்பெனி காரணம் கூற முடியாது! | Thedipaar News

Related Posts