இவங்க எல்லோரும் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறார்களா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி சீசன் 5. விஜய் டிவியில் இதுவரை ஒளிபரப்பான ஷோக்களில் பார்ப்பவருக்கும் நிகழ்ச்சி நடத்துபவருக்கும் பயனளிக்கும் ஒரே ஷோ என்றால் அது குக் வித் கோமாளி ஷோ தான். செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்த குழு, இயக்குனர் உள்ளிட்டோர் குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறியுள்ளனர். இவர்கள் எதற்காக வெளியேறினார்கள் என காரணம் தெரியவில்லை. திறமையான பட்டாளமே இந்த ஷோவை விட்டு வெளியேறி உள்ளதால் வருகிற சீசன் 5 வெற்றிகரமாக அமையுமா என்றால் அது சந்தேகம் தான். இருப்பினும் இந்த நிகழ்ச்சி குறித்த பெரிய எதிர்பார்ப்பு எல்லோர்க்கும் உள்ளது. 

குக் வித் கோமாளி சீசன் 5 படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கியது. அங்கிருந்து எடுக்கப்பட்ட குக் வித் கோமாளி செட் புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 5ல் கலந்துகொண்டிருக்கும் 8 போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. போட்டியாளர்கள் லிஸ்ட் தொகுப்பாளினி பிரியங்கா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, Youtuber இர்ஃபான், விவசாயி, கிருஷ்ணா மெக்கன்சி, விடிவி கணேஷ், நடிகை திவ்யா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வசந்த், நடிகை ஷாலின் ஜோயா உள்ளிட்ட 8 போட்டியாளர்கள் குக் வித் கோமாளி 5ல் பங்கேற்றுள்ளனர் என உறுதியாக கூறப்படுகிறது.

Related Posts