தலைவாசல் விஜயின் மகனை பார்த்துள்ளீர்களா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தலைவாசல் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் விஜயகுமார். அது முதல் இவரை சினிமா வட்டாரத்தில் தலைவாசல் விஜய் என்றே அழைக்கிறார்கள். இப்படத்தை தொடர்ந்து இன்று வரை பல திரைப்படங்களில் குணசித்ர கதாபாத்திரங்களில் கலக்கிக்கொண்டு இருக்கிறார். தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார். மேலும் நடிகராக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் பணிபுரிந்துள்ளார். சினிமாவில் மட்டுமின்றி சீரியலிலும் நடித்துள்ளார். டாப் நடிகர்களுக்கு எல்லாம் வயது இருக்கும்வரை தான் மவுசு. 

இவர் போன்ற குணசித்திர நடிகர்களுக்கு வயசு ஆக ஆகத்தான் மவுசே! நடிகர் தலைவாசல் விஜய்க்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். இந்த நிலையில், இவருடைய மகன் ஜெய்வன்ட் விஜய்யின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இவரை பார்த்த பலரும், அச்சு அசல் அப்படியே தலைவாசல் விஜய் போலவே இருக்கிறாரே என பலரும் கூறி வருகிறார்கள். மகன் மகள் இருவரையும் சினிமா பக்கம் காட்டாமல் வைத்துள்ளார்.


Related Posts