மாமியாருக்கு முத்தம் கொடுத்த மருமகன்! நடிகையின் வைரல் திருமண கூத்து!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா, விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் விருமன் படத்தில் நடித்துள்ளார். குறிப்பாக விஜய்யின் பிகில் படத்தில் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடித்தது தான் இவருக்கு அடையாளத்தை தேடி தந்தது. அதன்பின் அடுத்தடுத்து பல படங்களில் பிசியாகி விட்டார். சமீபத்தில் இவர் தனது தாய் மாமா கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுடையபெரிய ரிசப்ஷன் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இணையம் முழுக்க இவர்களது திருமணம் பற்றிய டாக் தான். ஒரு துணை நடிகையின் திருமணம் தான், ஆனால் அதையே பெரிய நடிகரின் வீட்டு திருமணம் போல பேச ஆரம்பித்துவிட்டார்கள். இந்திரஜா - கார்த்திக் திருமணத்தில் மிகவும் விமர்சனந்திக்கு ஆளான விஷயம் என்னவென்றால் மணமகன் கார்த்திக் மாமியாரின் உதட்டில் முத்தம் கொடுத்தது பெரும் சர்ச்சையானது. 

அது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் முதல் முறையாக கார்த்திக் இந்த சர்ச்சை பற்றி பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, நான் என்னுடைய அக்காவுக்கு கன்னத்தில் முத்தம் கொடுக்கபோனேன். ஆனால் அவர் திரும்பியதால் உதட்டில் பட்டுவிட்டது. இது எதிர்பாராமல் நடந்த ஒரு விஷயம் என்று கார்த்திக் தெரிவித்துள்ளார். அதற்குள் இந்த இணையதள வாசிகள் வாய்க்கு வந்தது எல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

Related Posts