இன்று நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க பிரபலங்கள் பலரும் காலையில் இருந்தே வந்துகொண்டிருக்கின்றனர். அஜித், விஜய், சூரி, திரிஷா,சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற பல நடிகர் நடிகைகள் வந்து தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகிறார்கள். வாக்களிக்க வந்த விஜய்யை மக்கள் படுத்தி எடுத்துவிட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். விஜயின் சட்டையை பிடித்து இழுப்பது, அவரது கையை பிடித்து இழுப்பது என விஜய்யை ஒருவழி செய்துவிட்டார்கள்.
நடிகை திரிஷாவும் வாக்களித்துவிட்டு பத்திரிகையாளர்களுக்கு கையை காட்டி போஸ் கொடுத்தார். அவரது அம்மாவும் உடன் வந்து இருந்தார்.மேலும் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்ற பெண் போலீஸ் தடுமாறி கீழே விழ திரிஷா ஷாக் ஆகி பதறி போனார். திரிஷா வந்தபோதும் மக்கள் திரிஷாவை ஒருவழி செய்து விட்டார்கள். கூட்ட நெரிசலில் மாட்டிக்கொண்ட திரிஷாவை பத்திரமாக அனுப்பி வைப்பதற்குள் போலீசாருக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது.
Font size:
Print
Related Posts