கனடா வருவாய் ஏஜென்சியை ஏமாற்றி $37 மில்லியன் வரி செலுத்துவோரின் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இரகசிய ஆவணமொன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
ரொறன்ரோ நிறுவனமான கோல்ட் லைன் என்ற தொலைதொடர்பு நிறுவனம் தொடர்பில் இவ்வாறு சர்ச்சை எழுந்துள்ளது.
கோல்ட் லைன் நிறுவனம் தொலைத்தொடர்பு வணிகத்தில் உள்ளது, ப்ரீபெய்ட், தொலைபேசி அட்டைகள் மற்றும் பிற சேவைகளை விற்பனை செய்கிறது.
CRA பகுப்பாய்வின்படி, கோல்ட் லைன் அனுமதி வாங்கியதை விட 10 மில்லியன் அழைப்பு நிமிடங்களை அதிகமாக விற்றுள்ளது. ஆனால் ஒரு இடைத்தரகராக, கோல்ட் லைனின் விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பீட்டளவில் சமமாக இருக்க வேண்டும்.
கோல்ட் லைன் நிறுவனம் போலி நிறுவனங்களை உருவாக்கி போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வரி ஏய்ப்பு மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
கனடாவில் 99 வயது பாட்டியின் சாதனை | Thedipaar News