நடிகை ரெஜினா தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலமாக பெரிய அளவில் பிரபலம் ஆனவர். அவர் அதன் பிறகு ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். இருப்பினும் இவருக்கு தமிழில் பெரிய ரீச் கிடைக்கவில்லை. மலையாளம், தெலுங்கு சினிமாக்களில் கூட நடித்து வருகிறார் இருப்பினும் இவரது படங்கள் பெரிதாக ஹிட் கொடுக்கவில்லை. தற்போது படங்கள், வெப் சீரிஸ் என படு பிசியாக நடித்து வருகிறார் ரெஜினா.
ரெஜினாவுக்கு சமூக அக்கறை ரொம்ப அதிகமாம். அவர் சின்ன வயதில் இருந்தே குப்பையை ஒழுங்காக குப்பைத்தொட்டியில் போடாதவர்களிடம் எப்போதும் சண்டை போடுவாராம்.
வளர்ந்த பிறகு சண்டை போடுவது சரியில்லை என புரிந்து கொண்டு, பொறுமையாக குப்பையை குப்பை தொட்டியில் போடுங்கள் என அட்வைஸ் செய்வாராம். பலரும் அதை கேட்டு இவர் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்களாம். சமீபத்தில் பீச்சில் ரெஜினா குப்பை சேகரிக்கும் பணியை ஆர்வத்துடன் செய்திருக்கிறார். அந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.