பிரபல நடிகைக்கு அந்த பிரபல நடிகருடன் காதல் திருமணம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

விஜய்யின் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அபர்ணா தாஸ். இதன்பின் கவினுடன் இணைந்து டாடா திரைப்படத்தில் நடித்திருந்தார். சில படங்களில் தான் நடித்துள்ளார், இருப்பினும் இப்போதே இவருக்கு அபர்ணா ஆர்மி ஆரம்பித்துவிட்டார்கள். சினிமாவில் சிலருக்கு மட்டும் தான் இப்படி ஒரு அதிர்ஷ்டம் அடிக்கும், நடித்த சில படங்களிலே ரசிகர்கள் உருவாகி விடுகிறார்கள். இளைஞர்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகை அபர்ணா தாஸ் 28 வயதில் திருமணம் செய்து கொள்ள உள்ளார். 

நடிகை அபர்ணா தாஸ் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் நடிகர் தீபக், சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், இன்று அபர்ணா தாஸ் மற்றும் தீபக்கின் திருமணம் கோலாகலமாக கேரளாவில் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Related Posts