இந்த நடிகர் யார் என்று கண்டுபுடிங்க? பெரிய நடிகருக்கே வில்லன்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சிம்பு நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மன்மதன். இப்படத்தில் இரட்டை வேடத்தில் சிம்பு நடித்திருப்பார். மேலும் ஜோதிகா, கவுண்டமணி, சிந்து துலானி, சந்தானம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இன்று வரை சிம்பு ரசிகர்களுக்கு மனதை கவர்ந்த திரைப்படங்களில் மன்மதன் படமும் ஒன்று. சிம்பு ஹீரோவா வில்லனா என குழம்பும் வகையில் அவரது நடிப்பு இருக்கும். 

இப்படத்தில் சிந்து துலானியுடன் நெருக்கமான காட்சியில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பாலகிருஷ்ணா. இந்த நிலையில், நடிகர் பாலகிருஷ்ணாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், மன்மதன் படத்தில் நடித்த நடிகரா இது! ஆள் அடையாளமே தெரியவில்லையே என கூறி வருகிறார்கள். இப்போது இவர் எந்த பட வாய்ப்பும் இல்லாமல் உள்ளார், மற்றபடி என்ன தொழில் செய்கிறார் என்பது குறித்த விபரம் தெரியவில்லை. இவரது புகைப்படத்தை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

Related Posts
©   Thedipaar

கனடா தேர்தல் ஆணையம்