கனடாவில் வேகமாக பரவி வரும் வைரஸ் குறித்த எச்சரிக்கை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கனடாவில் நோரோ வைரஸ் எதிர்பார்க்கப்பட்டதனை விடவும் அதிக வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஐந்து ஆண்டுகளை விடவும் இந்த ஆண்டில் நோரோ வைரஸ் தாக்கத்தின் பாதிப்பு அதிகமாக காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஒஹியோவின் நோர்வால்க் பகுதியில் முதன் முறையாக இந்த வைரஸ் தாக்கம் பரவிய காரணத்தினால் நோரா வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்கு குறிப்பிட்ட விசேட சிகிச்சை முறைமைகள் எதுவும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயிற்றுவலி, வாந்தி, தசைபிடிப்பு மற்றும் வயிற்றோட்டம் உள்ளிட்ட நோய்த் தாக்கங்கள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts