பிரபல நடிகரின் மகன்! சினிமாவில் சாதிக்க முடியவில்லை, இப்போது எப்படி உள்ளார்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

90ஸ் கிட்ஸ்களின் பிடித்தமான திரைப்படங்களின் லிஸ்டில் முக்கியமான திரைப்படம் புன்னகை தேசம். தருண் குமார், குனல் சிங், ஹர்ஷவர்தன், சினேகா, ப்ரீத்தா விஜயகுமார், தாமு என பலர் நடிக்க இப்படம் வெளியாகி இருந்தது. இந்த படம் அந்த காலத்து இளைஞர்களின் வாழ்க்கையை தெளிவாக காட்டும் திரைப்படம். தங்களது ஆசைக்கும் குடும்ப பொறுப்புகளுக்கு இடையே மாட்டிதவிக்கும் ஆண்களின் கதையை கூறும் படம். இந்த படத்தில் செல்வம் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ஹர்ஷவர்தன். பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகனான இவர் மந்திரன், புன்னகை தேசம், மானசீக காதல் போன்ற படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.சாந்தி என்பவரை திருமணம் செய்த இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். ஆனால் கடந்த 2021ம் ஆண்டு இவரது மனைவி சாந்தி கொரோனா தொற்றால் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்ளில் வலம் வருகிறது.

Related Posts