Mississauga மேயர் இடைத்தேர்தலில் 20 வேட்பாளர்கள் போட்டி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

Mississauga மேயர் இடைத் தேர்தலில் 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

தேர்தல் June மாதம் 10ஆம் திகதி நடைபெற உள்ளது. 

இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர் Mississauga நகரின் ஏழாவது மேயராக பதவி ஏற்பார்.

Mississauga நகரின் ஆறாவது மேயராக Bonnie Crombie 2014 முதல் 2024 வரை 10 ஆண்டுகள் சேவையாற்றினார்.

இந்த தேர்தலில் முன்கூட்டிய வாக்குப்பதிவு May 24, 25 ஆம் திகதிகளில் Mississauga Civic Centreரில் நடைபெறுகிறது.

தொடர்ந்து முன்கூட்டிய வாக்குப்பதிவு June 1, 2 ஆம் திகதிகளில் Mississauga நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறும்.

Ontario மாகாண Liberal கட்சி தலைவர் பதவியை வெற்றியடைந்த நிலையில் Mississauga மேயர் பதவியில் இருந்து Bonnie Crombie விலகியிருந்தார்.

புதிய மேயர் தெரிவாகும் வரை, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, தொகுதி வாரியாக நகரசபை உறுப்பினர்கள் Mississauga நகர மேயர் பதவியில் செயலாற்றி வருகின்றனர்.

Related Posts