பீகாரை சேர்ந்தவர் சிக்கந்தர் யாதவ். இவரது மனைவி, சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மாமனார் திலேஷ்வர் தார்வே மற்றும் மாமியார் கீதாதேவி ஆகியோர் மருமகனான சிக்கந்தர் யாதவுடனே தங்கிவிட்டனர்.
நாட்கள் செல்ல செல்ல சிக்கந்தருக்கும், அவரது உயிரிழந்த மனைவியின் தாயார் கீதா தேவிக்கும் ஒரு சமயத்தில் நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. மாமனார் திலேஷ்வர் தார்வேக்கு இவர்கள் இருவரும் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களின் நெருக்கத்தை நேரில் பார்த்த திலேஷ்வர், அவர்களை கையும் களவுமாக பிடித்துவிட்டார். அதனை அப்படியே விடாமல் ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டார்.
பஞ்சாயத்து கூட்டத்தில், கிராமத்தார் முன்னிலையில் தனது மாமியாருடன் காதல் ஏற்பட்டதாக சிக்கந்தர் யாதவ் வெளிப்படையாக கூறினார். மருமகனின் பேச்சை கேட்ட பஞ்சாயத்தினர் அவரின் சம்மதத்துடனும் கீதா தேவியின் சம்மதத்துடனும் இருவருக்கும் அனைவர் முன்னிலையிலும் திருமணம் செய்து வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Font size:
Print
Related Posts