கனடாவில் TGTE தேர்தல் இடைநிறுத்தப்படுமா? முன்வைக்கப்படும் கோரிக்கைகள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கனடாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான (TGTE) தேர்தல் மே மாதம் 5 ஆம் திகதி நடக்க உள்ளது. கனடாவில் இந்த தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த பலரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இம்முறை தேர்தல் ஆணையம் வரம்புகளை மீறி செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அரசியலமைப்பு விதிகளில் குறிப்பிடப்பட்ட கூறுகளை மீறி வேட்பாளர் தெரிவு நடந்துள்ளது.தேர்தல் ஆணையத்துக்கு சாதகமானவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டார்களா என்ற சந்தேகம் எழுகிறது.

கனடாவுக்கான தேர்தல் ஆணையகம் கலைக்கப்பட்டு, புதிய ஆணையாளரை நியமித்து, மீண்டும் கனடாவுக்கான தேர்தலை நடத்தி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேர்மையை காக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

TGTE கனடிய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து ஊடக சந்திப்பு நேற்று நடந்தது. இதன்போது தேர்தல் ஏற்பாடுகள் உடனே நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். 

புதிய திகதியில் தேர்தல் நடாத்தி நாடு கடந்த தமிழீழ அரசின் புதிய அரசை வலுவான வகையிலும் எழுச்சியான முறையிலும் நிறுவ உருத்திரகுமாரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊடக சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. 

Related Posts