இவர்கள் இருவரும் சும்மாவே இருக்க மாட்டார்களா? வைரமுத்து - இளையராஜா சண்டை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இளையராஜாவை விமர்சித்து வைரமுத்துவும், வைரமுத்துவை விமர்சித்து இளையராஜாவும் மேடையில் மாறி மாறி மறைமுகமாக விமர்சித்துக்கொள்வது ஊருக்கே தெரியும். வைரமுத்துவை எச்சரித்து இளையராஜாவின் தம்பி கங்கை அமரன், வாயை பொத்திட்டு இருக்கனும் என பேசியது சர்ச்சை ஆனது. அதை தொடர்ந்து இளையராஜா ரஜினியின் கூலி பட டீசரில் வந்த பாடலுக்கு அனுமதி வாங்கவில்லை என சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.இதனால் பாடல்களின் உரிமை யாருடையது என மீண்டும் விவாதம் வெடித்து இருக்கிறது. 

நீதிமன்றம் கூட பாடல் என்றால் அது இசையமைப்பாளருக்கு மட்டும் சொந்தமில்லை, பாடிய பாடகர், பாடலாசிரியர் என எல்லோரும் இருந்தால் மட்டும் தானே பாடல் சாத்தியம். அப்படி இருக்க ஒரு பாடலுக்கு இசையமைப்பாளர் மட்டும் உரிமம் கோருவது எப்படி நியாயம் என கேட்டிருந்தார். இந்நிலையில் வைரமுத்து உழைப்பாளர் தின ஸ்பெஷலாக ஒரு பதிவை போட்டிருக்கிறார். அதில் 

உழைப்பு, காதல், பசி இந்த மூன்றுமே மண்ணுலகை இயக்கும் மகா சக்திகள் அந்த உழைப்பு உரிமை பெற்றநாள் இந்த நாள் 

தூக்குக் கயிற்றுக்குக் கழுத்து வளர்த்தவர்களும் குண்டுகள் குடைவதற்காக நெஞ்சு நீட்டியவர்களும் வீர வணக்கத்துக்குரியவர்கள் இந்தச் சிறப்பு நாளுக்கு ஒரு சிவப்புப் பாடல் காணிக்கை 

எழுத்து வைரமுத்து இசை இளையராஜா குரல் ஜேசுதாஸ் இந்தப் பாட்டு இந்த மூவருக்கு மட்டுமல்ல உழைக்கும் தோழர் ஒவ்வொருவருக்கும் சொந்தம் என பதிவிட்டுள்ளார். 

பாடல் வரிகளை பதிவிட்டு எழுத்து வைரமுத்து, இசை இளையராஜா, குரல் ஜேசுதாஸ். இந்தப் பாட்டு இந்த மூவருக்கு மட்டுமல்ல உழைக்கும் தோழர் ஒவ்வொருவருக்கும் சொந்தம் என வைரமுத்து பதிவிட்டு இருக்கிறார்.மீண்டும் இளையராஜாவை மறைமுகமாக தாக்கி பேசி இருக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Related Posts