உத்தராஞ்சல் பல்கலைக்கழகம் நான் மோடிக்கு வாக்களிக்க 101 காரணங்கள் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவை நடத்தியது.சாந்தனு குப்தாவால் எழுதப்பட்ட இந்தப் புத்தகம், தனித்துவமான காமிக் வடிவத்தில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மோடி அரசின் பல்வேறு திட்டங்களின் பயனாளிகளிடம் நேரடியாகப் பேசி பெரும்பாலான கதைகளைச் சேகரித்துள்ளனர்.
101 காரணங்களில் ஒவ்வொன்றும் 2014-க்கு முந்தைய சூழ்நிலையின் ஒப்பீட்டுத் தரவு, சம்பந்தப்பட்ட மனிதக் கதைகள் மற்றும் ஆங்கிலக் கவிதைத் தொடர்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் பிரதமர் மோடிக்கு மக்கள் வாக்களிக்க 101 காரணங்கள் என்ற புத்தகத்தை மேற்கொள்காட்டி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது எக்ஸ் சமுக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சாந்தனு குப்தாவின் நான் மோடிக்கு வாக்களிக்க 101 காரணங்கள் என்ற புத்தக வெளியீட்டைப் பகிர்ந்து கொள்வதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.