என்ன ஆனது காஜல் அகர்வாலின் முகத்திற்கு?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழில் வெளியான பழனி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் காஜல் அகர்வால். பல படங்கள் நடித்தும் இவருக்கு சில காலம் தமிழில் முன்னணி ஹீரோயினாக முடியவில்லை. இருப்பினும் கடுமையாக உழைத்து, விஜய், அஜித், தனுஷ் எனப் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துள்ளார். தற்போது காஜல் அகர்வால் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இவருக்கு ஒரு நல்ல கம்பேக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏனெனில் இவருக்கு குழந்தை பிறந்த பிறகு இவர் நடிக்கும் முதல் படம் இதுதான். சமீபத்தில் காஜல் அகர்வாலின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் காஜல் அகர்வாலின் முகம் வீங்கி ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். காஜலின் முகத்தில் முன்னர் இருந்த இளமை இல்லை என்றும் வயதானவர் போன்றும் தோற்றமளிப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்!.

Related Posts