வாய் கூசாமல் நடிகரை திட்டிய செல்வராகவன்! இப்படி ஒரு கேவலமான மனுஷனா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவருக்கு என்று சினிமாவில் தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இவரது படங்களில் சில விஷயங்கள் புரியாமலே இருக்கும் ஆழமாக சிந்தித்தால் மட்டுமே புரியும். கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த நானே வருவேன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனராக மட்டுமின்றி சமீபகாலாமாக நடிகராகவும் கலக்கி வருகிறார்.சொல்லப்போனால் நடிகராக இவர் நடிக்க ஆரம்பித்த பின்னர் இவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை கூடிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில், புதுப்பேட்டை படத்தின் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் குறித்து பிரபல நடிகர் பாவா லட்சுமணன் பகிர்ந்துள்ளார். இவரை பல படங்களில் துணை நடிகராக பார்த்திருப்பீர்கள். வாமா மின்னலு என்ற வசனம் மூலம் பிரபலமானவர். 

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பாவா லட்சுமணன் கூறியது, புதுப்பேட்டை படத்தில் நடித்து கொண்டிருக்க இயக்குனர் செல்வராகவன் திடீரென என்னை படத்திலிருந்து அனுப்பிவிட்டார். எனக்கு நடிக்கவே தெரியவில்லை என கூறிவிட்டார். ரொம்ப கெட்ட வார்த்தைகளில் கூட என்னை திட்டினார். மனசு கேட்கல அதனால் படத்திலிருந்து வெளியேறிவிட்டேன். செல்வராகவன் தன்னிடம் துணை இயக்குனராக பணிபுரிபவர்களையும் திட்டுவார் என கூறியுள்ளார். இவரது இந்த பேட்டியை பார்த்தவர்கள் செல்வராகவன் இவ்வளவு கடுமையான நபரா என ஷாக் ஆகி வருகிறார்கள்.

Related Posts