ரொறன்ரோ Royal York வீதியில் இளைஞர் குழு நடத்திய தாக்குதல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரொறன்ரோ Royal York வீதியில்  இளைஞர்கள் மேற்கொண்ட கத்தி குத்து தாக்குதலில் நபர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தம்பதியினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் பின்னர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கத்தி குத்து தாக்குதலில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவருக்கு உயிராபத்து கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related Posts