யாழில் போதைப் பொருட்களை உற்பத்தி நிலையம் முற்றுகை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

யாழ்ப்பாணம் இணுவிலில் முதல்முறையாக போதைப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிலையமொன்று முற்றுகையிடப்பட்டது.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருளை விற்பனை செய்யும் கும்பலை தேடி சென்றபோது வீடொன்றில் இயங்கிய போதைப்பொருள் உற்பத்தி நிலையம் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 


ஐஸ் போதைப்பொருளுடன் யாழ்ப்பாணத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து போதைப்பொருள் உற்பத்தி நிலையம் நேற்று முற்றுகையிடப்பட்டது.

குறித்த நிலையம் இரசாயாண ஆய்வு கூடத்தை போன்று வடிவமைக்கப்பட்டு இரசாயனங்களை பயன்படுத்தி போதைப்பொருள் உற்பத்தி நடைபெற்றதாக சட்ட வைத்திய அதிகாரி நேரில் சென்று பார்வையிட்டு இன்று உறுதிப்படுத்தினார்.

வாள்வெட்டு கும்பலொன்றில் இயங்கும் ஒருவருக்கு சொந்தமான வீட்டிலேயே குறித்த நிலையம் இயங்கியுள்ளதுடன் பொலிஸார் முற்றுகையிட்டபோது அங்கு எவரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் போதைப்பொருள் ஆய்வுகூடத்தில் பிரதான குற்றவாளிகளை தேடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் கொழும்பில் இருந்து இரசாயன பகுப்பாய்வு பிரிவினரை அழைத்து விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் ஐந்து மாகாணங்களுக்கு எச்சரிக்கை | Thedipaar News

Related Posts