ஜோதிகாவை ஓரம்கட்டிய பாலிவுட்! கோபுரத்தில் ஏற்றிவிட்ட தமிழ் சினிமா!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஏராளமான ஹிட் படங்களில் நடித்திருந்த ஜோதிகா இப்போது புகழின் உச்சத்திற்கு சென்றுவிட்டார். நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். எப்போதும் இவர்கள் பற்றிய செய்தி வைரலாகி கொண்டே இருக்கும். இடையில் சினிமாவில் இருந்த இவர், தற்போது பிஸி நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார். முன்னரெல்லாம் ஒரு நடிகை திருமணம் செய்துகொண்டாலே அவரது மார்க்கெட் காலி என்பார்கள். அந்த குறிப்பிட்ட நடிகையை பல காலங்களுக்கு பின்னர் சீரியலில் ஹீரோயினாக பார்க்கலாம் அல்லது குணசித்திர வேடத்தில் பார்க்கலாம். ஆனால் ஜோதிகா இது எல்லாவற்றையும் உடைத்து தள்ளிவிட்டார், திருமணத்திற்கு பின்னர் இவர் முன்னர் இருந்த இடத்தை விட இப்போது புகழின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். அந்தவகையில் சைத்தான் , ஸ்ரீகாந்த் போன்ற ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். 

ஆரம்பத்தில் ஜோதிகா ஹிந்தி படத்தின் மூலமாக தான் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் பாலிவுட் சினிமாவில் நடிக்கவில்லை. இந்த நிலையில் ஜோதிகா பாலிவுட் படங்களில் நடிக்காமல் இருந்தது எதனால் என்பதை குறித்து பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியதாவது, என்னுடைய முதல் படம் தோல்வியை தழுவியது. இதனால் பாலிவுட்டில் இருந்து எனக்கு ஒருமுறை கூட வாய்ப்பு வரவில்லை. அதன் பின் தென்னிந்திய படங்களில் வாய்ப்பு கிடைக்க அங்கு நடித்துவந்தேன் என்று ஜோதிகா தெரிவித்துள்ளார். என்னதான் பாலிவுட் சினிமா ஜோதிகாவை தூக்கி எறிந்தாலும் கூட தமிழ் சினிமா ஜோதிகாவை கோபுரத்தில் உட்கார வைத்துவிட்டது.

Related Posts