பிரபல இசையமைப்பாளருக்கு விவாகரத்தா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சங்கீத குடும்பத்தில் இருந்து வந்தவர். இவர் வெயில் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடிக்கொடுக்க அஜித்தின் கிரீடம், பொல்லாதவன், ஆடுகளம், ஆயிரத்தில் ஒருவன், குசேலன், காளை, தலைவா என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வந்தார். இன்று தமிழ் சினிமாவில் நீங்க முடியாத இடத்தில் உள்ளார். இப்போது ஹீரோ, இசையமைப்பாளர் என பயணித்து வரும் ஜி.வி.பிரகாஷ் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பள்ளி முதலே இருவரும் காதலித்து வந்துள்ளனர். 

இவர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு அன்வி என்கிற பெண் குழந்தை பிறந்தது. ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி சேர்ந்து நிறைய ரொமான்டிக் பாடல்கள் எல்லாம் கொடுத்துள்ளார்கள். குறிப்பாக 90ஸ் கிட்ஸ் மத்தியில் இந்த ஜோடி மிகவும் பிரபலமானவர்கள். தற்போது இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விரைவில் விவாகரத்து பெற இருப்பதாக வதந்தி இணையத்தில் பரவி வருகிறது, எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இந்த செய்திக்கு இருவரும் மவுனம் காத்து வருவதை பார்க்கும்போது, கண்டிப்பாக இருவருக்கும் ஏதோ பிரச்சனை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

Related Posts