பிரபல நடிகை பிரபல நடிகரின் உறவினருடன் காதல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

காதலர் தினம் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் லேகா வாஷிங்டன். இவர் நடித்த படங்கள் பெரிதாக இவருக்கு கைகொடுக்கவில்லை. காரணம் இவரது ஓவர் ஆக்டிங்கை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் தமிழ் சினிமாவில் இவர் உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், வா, கல்யாண சமையல் சாதம், அரிமா நம்பி உள்ளிட்ட படங்களில் நடித்தும் இவருக்கு எதுவும் வெற்றியை கொடுக்கவில்லை. தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களிலும் நடித்துள்ள இவர் ஒரு ஆங்கிய படத்திலும் நடித்திருக்கிறார்.

சினிமாவில் காணாமல் போன இவர் குறித்து தற்போது ஒரு தகவல் வலம் வருகிறது. அதாவது 37 வயதாகும் லேகா வாஷிங்டன் விவாகரத்து ஆன ஒரு நடிகரை காதலித்து வருகிறாராம். அவர் வேறுயாரும் இல்லை நடிகர் அமீர்கானின் உறவினர் இம்ரான் கான் தானாம். இதுகுறித்து இம்ரான் கான் ஒரு பேட்டியில், என் வாழ்க்கையில் மாற்றத்தை லேகா வாஷிங்டன் தான் ஏற்படுத்தினார்.நான் மன அழுத்தத்தில் இருந்த போது எனக்கு உதவியாக இருந்தவர் அவர் இல்லாமல் ஒரு வாழ்க்கையை என்னால் தொடர முடியுமா என்று தெரியவில்லை என பேசியுள்ளார். இப்படி பேசியுள்ளதை பார்க்கும்போது, இருவரும் காதலிக்கிறார்கள் என்பது போல் தான் தெரிகிறது.


Related Posts