உக்ரைன் மீது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் உதவியுடன் ரஷியாவின் தாக்குதலை உக்ரைன் முறியடித்து வருகிறது.
இந்த நிலையில் இன்று ரஷியா கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவை நோக்கி உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும் ரஷியா தெரிவித்துள்ளத.கிரிமியா பகுதியில் கருங்கடல் பகுதியில் இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது.
கருங்கடலுக்கு மேற்பகுதியிலும், பெல்பெக் விமானப்படை தளத்திற்கு அருகிலும் உக்ரைனின் பல ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டது. சுடடு வீழ்த்தப்பட்ட ஏவுகணைகளின் உதிரிகள் வீடுகள் மீது விழுந்தன. ஆனால், இதன் காரணமாக காயம் ஏதும் ஏற்படவில்லை என் செவாஸ்டாபோல் கவர்னர் மிகைல் ரஸ்வோஜயேவ் தெரிவித்துள்ளார்.
ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் 9 உக்ரைன் டிரோன்கள், இரண்டு வில்ஹா ராக்கெட், இரண்டு ரேடார் எதிர்ப்பு HARM ஏவுகணைகள் பொல்கோரோட் மாகாணத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தின்போது ஏவுகணைகள் வீடுகள் மீது விழுந்து தீப்பிடித்தது. இதில் இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர்.அத்துடன் குர்ஸ்க் மாகாணத்தில் ஐந்து உக்ரைன் டிரோன்கள், பிரியன்ஸ்க் மாகாணத்தில் மூன்று டிரோன்கள் ஆகியவற்றையும் சுட்டு வீழ்த்தியதாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையில் பல்வேறு ஊழல் மோசடிகள்! | Thedipaar News