சச்சின் காவலர் துப்பாக்கியால் சுட்டுகொண்டு விபரீத முடிவு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவருடைய பாதுகாப்புப் பணியில் மாநில ரிசர்வ் போலீஸ் படை வீரராக ஜவான் பிரகாஷ் கப்டேவும் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் சில நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு தனது சொந்த ஊரான மகாராஷ்டிரா மாநிலம் ஜாம்நர் நகருக்குச் சென்றிருந்தார்.

அப்போது தனக்கு வழங்கப்பட்டு இருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே, இன்று அதிகாலை சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். 

ஜவான் பிரகாஷ் கப்டேவுக்கு வயதான பெற்றோர், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனிப்பட்ட காரணங்களுக்காக ஜவான் பிரகாஷ் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்றும் இருப்பினும் விசாரணை முடிவிலேயே இது குறித்து உறுதியாக தெரிவிக்க முடியும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளருக்கு விவாகரத்தா! | Thedipaar News

Related Posts