வாக்களித்து விட்டு திரும்பியபோது விபத்து!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஆந்திர மாநிலம் பபட்லா மாவட்டம் சின்னகஞ்சம் பகுதியில் இருந்து ஐதராபாத் நோக்கி நேற்று இரவு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் 42 பேர் பயணித்தனர்.பல்நாடு மாவட்டம் சில்லக்கல்ரிபேட்டை பகுதியில் இன்று அதிகாலை சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வந்த லாரி மீது பஸ் மோதி விபத்தில் சிக்கியது. 

இந்த கோர விபத்தில் பஸ் முழுவதும் தீப்பற்றியது.தீ மளமளவென பரவியதால் பஸ் டிரைவர், பயணிகள் என மொத்தம் 6 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். 

படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையில், வாக்களித்து விட்டு திரும்புகையில் விபத்து நடந்துள்ளது தெரிய வந்தது.

முல்லைத்தீவு நகரை நோட்டமிட்ட உலங்கு வானூர்தி | Thedipaar News

Related Posts