ரஷ்யா யுத்தத்தில் இலங்கையர்கள் l ஜனாதிபதி விடுத்த அதிரடி உத்தரவு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இலங்கையிலிருந்து வெகு விரைவாக ரஷ்யாவிற்கு உயர்மட்ட அரச தூதுக்குழுவொன்றை அனுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொழும்பில் இன்று (16) காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய இதனைக் குறிப்பிட்டார்.

இதன்படி, வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஒருவர் அடங்களான தூதுக்குழுவை ரஷ்யாவிற்கு செல்லுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்யாவிற்கு சென்றுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் வகையில், பாதுகாப்பு அமைச்சில் அவசர தொலைபேசி இலக்கமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

ரஷ்யா – யுக்ரேன் யுத்தத்திற்கு சட்டவிரோதமாக சென்ற 16 பேர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் நேற்று தெரிவித்திருந்தார்.

மேலும், இந்த யுத்தத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பாக 288 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இதேவேளை, ரஷ்யா – யுக்ரேன் யுத்தத்துடன் தொடர்புப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை ரஷ்ய தூதரகத்திடம் கோரியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவிக்கின்றார்.

மேலும், அரசாங்கத்தின் தேவைக்கேற்ப இந்த இராணுவ வீரர்களை நாட்டிற்கு அழைத்து வர தன்னால் தலையீடு செய்ய முடியும் என ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.  (P)


Related Posts