கடும் மழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இன்று மாலை முதல் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும்.
கொழும்பு தொடக்கம் காலி ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60‐ 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் அவ்வப்போது கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள்மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் .
எனவே, மீனவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
இதேவேளை,தென்கிழக்கு அரபிக்கடலில் உள்ள ஆழ்கடல் பகுதிகளில் உள்ள கடற்படை மற்றும் மீனவர் சமூகத்தினருக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புக்கான ஆலோசனையை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தென்கிழக்கு கடற்பரப்புகளிலும் அடுத்த சில நாட்களில் கடும் மழையுடன் கூடிய பலத்த காற்று மேலும் கொந்தளிப்புடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மறு அறிவித்தல் வரும் வரை கீழே உள்ள வரைபடத்தில் சிவப்பு நிறத்தால் குறிக்கப்பட்ட கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. (P)