ஒரு காலத்தில் கனவுக்கன்னி இப்போது எங்கே போனார்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் 90களில் தன்னுடைய கிளாமர் தோற்றத்தாலும் வசீகரத்தாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர் தான் நடிகை ஹீரா. முரளி நடிப்பில் 1991ம் ஆண்டு வெளியான இதயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார். அப்போது இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருந்தது. என்னதான் திறமை, அழகு இருந்தாலும் கூட, இவர் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள் சரியாக இல்லாமல் போய்விட்டது. 

அதனால் வாய்ப்புகளும் குறைந்துவிட்டது. இப்போது முற்றிலுமாக சினிமாவில் இருந்து விலகிவிட்டார். 52 வயதாகும் நடிகை ஹீரா கடந்த 2002ம் ஆண்டு புஷ்கர் மாதவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார், ஆனால் 2006ம் ஆண்டே பிரிந்துவிட்டார்கள்.ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்து வந்த ஹீரா இப்போது சுத்தமாக ஆளே மாறி அடையாளம் தெரியாத அளவில் உள்ளார்.

Related Posts